சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்!

Published

on

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பைரவி உள்பட பல திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 1965ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் என்பவர் இயக்கிய ’வெண்ணிற ஆடை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதே படத்தில் தான் ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், ஹீரோவாகவும், வில்லனாகவும் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 82 வயதான ஸ்ரீகாந்த் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு குறித்து கூறியிருப்பதாவது: நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்க முடியாத பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி குறித்து கூறியிருப்பதாவது: என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

seithichurul

Trending

Exit mobile version