தமிழ்நாடு

அதிகனமழை: இந்த 5 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கப் போகிறது மழை #HeavyRainfall

Published

on

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். அதேபோல தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஷியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸாகவும் இருக்கும்’ இவ்வாறு விளக்கமாக தகவல்களை அளித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலக் கிளை அலுவலகம்.

 

 

Trending

Exit mobile version