விளையாட்டு
கெத்து கட்டிங்… அதகள டிரிம்மிங்… தல தோனியின் மாஸ் நியூ லுக்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தினம் தினம் டிரெண்டிங்கில் வரும் வீரர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னாள் கேப்டனுமாக நம்ப தல தோனி மட்டும் தான்.
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய அளவில் மிகப் பிரபலமான கிரிக்கெட் வீரராக விளங்குபவர் தோனி மட்டும் தான். அப்படிப்பட்ட தோனி அவ்வப்போது தான் சமூக வலைதளங்களில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி பதிவுகள் இடுவார்.
View this post on Instagram
அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்து உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் வெள்ளை முடியுடனும், நீண்டு வளர்ந்திருந்த தாடியுடனும் வலம் வந்து கொண்டிருந்தார் தோனி. அதைப் பார்த்து, ‘தல சோகத்துல ஃபீல் பண்றாப்ல’ என்று பலர் வருத்தப்பட்டனர்.
அதற்கெல்லாம் குட்-பை சொல்லும் வகையில், மொஹாக் ஸ்டைலில் கட்டிங் செய்து, ‘300 பருத்தி வீரர்கள்’ ஸ்டைலில் தாடி வைத்து உள்ளார் தோனி.
தல தோனிக்கு இந்த ஸ்டைலை செய்துவிட்ட ஹேர் ஸ்டைலிஸ்ட், புகைப்படங்களைப் பகிர்ந்து இன்றைய வைரலாக மாற்றியுள்ளார்.