சினிமா

பாரதி கண்ணம்மா சீரியலில் மாறும் நடிகை… புது நடிகை இவர்தான்!….

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டி.ஆர்.பி. தாறுமாறாக போய் வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து வரும் ரோஷினிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி, திரைப்படமாக இருந்தாலும் சரி, நல்ல கலர் உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கலர் சற்று குறைவான ரோஷினிக்கு இந்த சீரியலில் கண்ணம்மா வேடம் கிடைத்தது. கண்ணம்மா கதாபாத்திரம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து ரோஷினி திடீரென விலகி முடிவெடுத்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோஷினிக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

குறிப்பாக தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பேனர் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாகவும், இந்த நேரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இரண்டு குழந்தைக்கு தாயாகவும் நடித்துக்கொண்டிருபது என்பது சரியாக இருக்காது என்பதால் அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா கேரக்டரில் ரோஷினிக்கு பதிலாக விரைவில் வேறு ஒருவர் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மாடலும், டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவருமான வினுஷா தேவி கண்ணம்மா வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இவர் எப்படி அந்த வேடத்தில் நடிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே வெண்பா கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரீத்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவரும் சீரியல் இருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version