ஜோதிடம்

இன்னும் 9 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: வெற்றி, அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு!

Published

on

இன்னும் 9 நாட்களில் சுக்கிரன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையவுள்ளார். செப்டம்பர் 18, 2024 அன்று நடைபெறவிருக்கும் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி, மற்றும் வெற்றியை எளிதாகக் கொண்டு வரவிருக்கிறது. அதிர்ஷ்டம் தரும் இந்த பெயர்ச்சி யாருக்கு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

துலாம் ராசி:

சுக்கிரன் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் தரவிருக்கிறார். பொருளாதார லாபம், வேலைவாய்ப்புகள், மற்றும் திருமண வாழ்வில் சிறப்பான மாற்றங்கள் காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்து, பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சுக்கிரனின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றங்களை அடையுவார்கள்.

மகர ராசி:

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வணிகம் மற்றும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு, தந்தையுடனான உறவு வலுப்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், பணியிடத்தில் உங்களின் திறமைகளை நிரூபிக்க தேவையான ஊக்கத்தை பெறுவீர்கள்.

கும்ப ராசி:

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கவிருக்கின்றன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து, பழைய பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு, உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சுக்கிர யோகத்தை பெற விரும்புவோர், “ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத்” என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.

 

Poovizhi

Trending

Exit mobile version