சினிமா செய்திகள்

சிம்பு படத்தில் வெங்கடேஷ் பட்.. குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது?

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் செப் வெங்கடேஷ் பட். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கன்னட பதிப்பான குக் வித் கோமாளியிலும் நடுவராக இருந்தார்.

சந்தானம் நடிப்பில் நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ள சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் வெங்கடேஷ் பட் நடித்து இருந்தார்.

அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த அஷ்வின் நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றார்.

அப்போது குக்வித் கோமாளி சீசன் 3 எப்போது, மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வருகின்றனவா என்று வெங்கடேஷ் பட்டிடன் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர் குக் வித் கிறுக்கு ஃபைனல் முடிந்துவிட்டது. குக்வித் கோமாளி சீசன் 3 செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் நான் திரைப்படங்களில் நடிப்பதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் சிம்பு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெங்கடேஷ் பட் உறுதி செய்துள்ளார். ஆனால் எந்த படம் என்ற விவரங்கள் தெரியவில்லை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த காமெடி நடிகர் புகழ், சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version