சினிமா செய்திகள்

அஜித் 50-வது பிறந்தநாளுக்கு ‘தல 50’ மறுவெளியீடு… கோரிக்கை வைக்கும் வெங்கட் பிரபு!

Published

on

தல அஜித் 50-வது பிறந்தநாள் அன்று ‘தல 50’ திரைப் படத்தை மறு வெளியீடு செய்ய வேண்டும் என அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது தயாரிப்பாளருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

தல அஜித் தனது 50-வது பிறந்தநாளை வருகிற மே 1-ம் தேதி கொண்டாட உள்ளார். அன்றைய தினத்தில் வலிமை அப்டேட் பெரிதாக எதாவது கிடைக்கும் என தல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தல 50-வது படமான மங்காத்தா படத்தை மீண்டும் மறு வெளியீடு செய்ய வேண்டும் என மங்காத்தா திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கோரிக்கை வைத்துள்ளார்.

மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. குறிப்பாக யுவன் சங்கர் ராஜாவின் இசை இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக உள்ளது. இந்த சூழலில் மங்காத்தா தயாரிப்பாளர் தல 50-வது பிறந்தநாளுக்கு இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கோரியுள்ளார்.

மங்காத்தா படத்தை அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version