சினிமா செய்திகள்

’என்ன சரக்கு ப்ரோ..?’ என அஜித்தை கலாய்த்தவருக்கு வெங்கட் பிரபுவின் ‘மாஸ்’ ரிப்ளை..!

Published

on

நடிகர் அஜித்தை கலாய்க்க முற்பட்ட நெட்டிசன் ஒருவருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த பதில் தான் தற்போது ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி வருகிறது.

நெட்டிசன் ஒருவர் வெங்கட் பிரபுவை ட்விட்டரில் டேக் செய்து ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். மங்காத்தா படக் காட்சி ஒன்றை பகிர்ந்து அந்தப் பதிவு டேக் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ பதிவில் படப்பிடிப்பில் நடைபெறும் நகைச்சுவைக் காட்சி இருந்தது. அதில் அர்ஜுன் உடன் நிறைய காவலர்கள் மத்தியில் அஜித் நின்று கொண்டு போஸ் கொடுக்காமல் ஆடிக் கொண்டிருப்பார்.

அந்த வீடியோவை ஷேர் செய்து வெங்கட் பிரபுவை டேக் செய்து, “அது என்ன சரக்கு ப்ரோ” என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு இயக்குநர் வெங்கட் பிரவு, “சரக்கு என்னும் காதல்… மை டியர் தல” என பதில் செய்து இருந்தார். இந்தப் பதிவு தான் தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version