சினிமா

கஸ்டடி விமர்சனம்: ரசிகர்களை கஷ்டப்படுத்திய வெங்கட் பிரபு!

Published

on

வெங்கட் பிரபு படம் என்றாலே செம ஜாலியான படமாகவும் புதுமையாகவும் இருக்கும் என நினைத்து போன ரசிகர்களுக்கு 90களில் நடக்கும் பீரியட் சேஸிங் கதையாக படம் இருக்கிறது என்கிற ஆரம்பமே ரசிகர்களை தலை சுற்ற வைத்து விடுகிறது.

தமிழ் படம் நாக சைதன்யா நடித்த நிலையில், ஆந்திராவில் நடப்பதே படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக மாறுகிறது.

#image_title

பிரியாமணியை முதல்வராகவும் அவருக்காக கொலை செய்யும் ஒரு தலை காதலராக அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தையும் உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.

அரவிந்த் சாமியை பிடித்துக் கொண்டு வரும் சிபிஐ அதிகாரி சம்பத்தை (பிரேம்ஜி போல இவரும் வெங்கட் பிரபு டபாரா செட் ஆகிவிட்டார்) கான்ஸ்டபிள் நாக சைதன்யா கைது செய்கிறார்.

#image_title

சிபிஐ வசம் அரவிந்த்சாமி சிக்கிக் கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டால் தனது பதவிக்கு ஆப்பு வந்து விடும் என்பதால் எஸ்பி சரத்குமாரை வைத்து அரவிந்த்சாமியை போட்டுத் தள்ள ஆணையிடுகிறார் பிரியாமணி.

சம்பத்தையும் அரவிந்த்சாமியையும் குடும்பத்தில் ஏற்பாடு செய்த அவசரத் திருமணத்தில் இருந்து தனது காதலியையும் கூட்டிக் கொண்டு பெங்களூரு நீதிமன்றத்துக்கு நாக சைதன்யா சென்றாரா? இல்லையா? என்பது தான் இந்த கஸ்டடி படத்தின் கதை.

சேஸிங் காட்சிகளை வைத்தே ஆக்‌ஷன் படமாக கொடுத்து விடலாம் என வெங்கட் பிரபு போட்ட பிளான் எல்லாம் சரி தான். ஆனால், திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் பல இடங்களில் நடந்த சொதப்பல்கள் காரணமாக படம் ரசிகர்களை ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டது.  இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை பெரிதாக கைகொடுக்கவில்லை.

அரவிந்த் சாமியின் ஒன்லைனர்ஸ் படத்துக்கு சுவாரஸ்யத்தை கொடுத்தாலும், திடீரென நல்லவராக அவர் ஆவது எல்லாம் படத்திற்கு பெரிய மைனஸ் ஆக மாறிவிட்டது.  மொத்தத்தில் கஸ்டடி – கஷ்டம்!

ரேட்டிங்: 2/5.

author avatar
seithichurul

Trending

Exit mobile version