தமிழ்நாடு

தினமும் 500 டன் ஆக்சிஜன் தயாரித்து தருகிறோம்: தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை மனு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென பிரதமர் மோடி நேற்று தனது உரையில் கூறி இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தங்களுடைய ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க அனுமதி அளித்தால் தினமும் 500 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தினமும் 500 டன் ஆக்சிஜனை தயாரித்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version