தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம்!

Published

on

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் குறித்த அறிவிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்தி துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா என்பவர் சமீபத்தில் ஓய்வு பெற்றதை அடுத்து அவரது பதவிக்கு தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக வேல்ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தெரிவித்துள்ளார்

அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்தித் துறை இயக்குனராக பணியாற்றி வந்த வேல்ராஜ் அவர்கள் புதிய துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த பத்து பேர்களில் 7 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர்கள் என்பதும் தற்போது அவர்களின் ஒருவரே துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்ட வேல்ராஜ் அவர்கள் கடந்த 33 ஆண்டுகள் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழக பணியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேல்ராஜ் அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலையின் துணைவேந்தராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version