தமிழ்நாடு

திமுகவுடன் பேச்சுவார்த்தை: செய்தியாளர்களை சந்தித்து முக்கிய முடிவை அறிவிக்கிறார் வேல்முருகன்!

Published

on

கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜகவுக்கு 20 தொகுதிகளும் பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி, இடது கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுகவுடன் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றார். அவருடைய கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் மட்டுமே திமுக கொடுக்க வாய்ப்பு என செய்தி வெளிவந்துள்ளதால் இன்றைய பேச்சுவார்த்தைக்கு பின் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version