தமிழ்நாடு

தொடங்கியது வேலூர் வாக்கு எண்ணிக்கை: அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை!

Published

on

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார்.

தொடர்ந்து தேர்தலில் பொதுமக்கள் போட்ட வாக்குகள் எண்ணப்பட தொடங்கியது. அதில் காலை 9 மணிக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்தார். ஆனால் 9.15 மணிக்கு அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீண்டும் முன்னிலை பெற்றார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருப்பதால் இந்த முன்னிலை மாறி மாறி வரும், யார் வெற்றிபெறுவார் என்பதை தற்போதைக்கு கணிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

இதில் தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 61798 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 586445 வாக்குகளும் பெற்றுள்ளனர். 3153 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமி 2308 வாக்குகள் பெற்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version