தமிழ்நாடு

வேலூர் தேர்தல் பிரச்சாரம் எனக்கு முக்கியமில்லை: தமிழிசை அதிரடி!

Published

on

வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் அங்கு போட்டியிடுகிறார். ஆனால் அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பாஜக இதுவரை வேலூர் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

முத்தலாக் தடை சட்டத்தை பாஜக நிறைவேற்றியுள்ளதால் வேலுரில் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்தால் தங்களுக்கு விழும் ஓட்டும் விழாது என அதிமுக கருதுவதால் பாஜக தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை என பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசையிடம், நீங்கள் ஏன் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் அதிகம் இருக்கிறது. இப்போதைக்கு அதுதான் முக்கியமான பணி என்பதால், கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளரை ஆதரித்து வேலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. பிற காரணங்கள் ஏதுமில்லை என தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version