தமிழ்நாடு

வேட்டி போனால் அது நமக்கு அவமானம்: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம்!

Published

on

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். அதிமுக, திமுக கட்சிகள் தீவிர ஆலோசனையில் இறக்கியுள்ளது.

நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் அங்கு மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். அவரை எதிர்த்து மீண்டும் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். ஏ.சி.சண்முகம். இதனையடுத்து இரு கட்சியினரும் தங்கள் வேட்பாளரை வெற்றிபெற வைக்க கோதாவில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வேலூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வீரமணி, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம், ஆட்சி என்பது துண்டு போன்றது. கட்சி என்பது வேட்டி போன்றது. துண்டு போனால் அதனை பிறகு பெற்றுக்கொள்ளலாம். வேட்டி போனால் அது நமக்கு அவமானம். நமது மானத்தைக் காக்கக் கூடிய தேர்தலாக இந்த தேர்தல் இருக்கிறது. கட்சியைக் காப்பாற்ற இதுதான் தேர்தல். இதனை மனதில் வைத்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று நம்மை நிரூபிக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் திமுக ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது நமக்கு கௌரவ பிரச்சனை இதில் நாம் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என திமுகவினரை அறிவுறுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version