செய்திகள்

யுடியூப்…சிங்க முகமுடி.. ஸ்பிரே… ஷோலோ கொள்ளையன் சிக்கியது எப்படி?…

Published

on

கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் கடையின் பின்புற சுவரில் துளையிட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது பதிவான சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் முகமூடி போட்ட கொள்ளையன் ஒருவன் கேமராவில் மீதும் ஸ்பிரே அடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு டீக்காராமன் என்பவனை போலீசார் கைது செய்தனர். மேலும், சுடுகாட்டில் அவர் புதைத்து வைத்திருந்த 15 பவுன் நகைகளையும் போலீசார் கைப்பற்றினர்.

போலீசாரின் விசாரணையில் டீக்கராமன் யாருடன் சேர்ந்து கூட்டு வைக்கமால் அவர் தனியாகத்தான் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையடித்து செட்டில் ஆக வேண்டும் என்பதே டீக்காராமனின் குறிக்கோளாக இருந்துள்ளது. அதற்காக பல திட்டங்களை போட்டு கடைசியாக தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளையடிப்பது என முடிவெடுத்தார்.

10 நாட்கள் கடையின் உள்ளே, வெளியே என நோட்டமிட்டுள்ளார். கடையில் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே செல்வது என முடிவெடுத்துள்ளார். சத்தம் வராமல் துளையிடுவது எப்படி என்பதையும் யுடியுப்பில் பார்த்துள்ளார். காவலாளிக்கு தெரியாமல் ஒவ்வொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாக துளையிட்டு வந்துள்ளார். சிங்க முகமுடி, முடியை மறைக்க விக், சிசிடிவி கேமராவை மறைக்க ஸ்பிரே என ஹாலிவுட் சினிமா பாணியில் களம் இறங்கி, கடந்த 15ம் தேதி கொள்ளையடித்துள்ளார்.

மேலும், தங்கத்தை உருக்குவது எப்படி என்பதையும் யுடியூப்பில் பார்த்து அதற்கான மூல பொருட்களையும் வாங்கி வைத்துள்ளார். சுடுகாட்டில் நகைகளை ஒளித்து வைத்துவிட்டால் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என கணக்கு போட்டுள்ளார். ஆனால், அவரின் கணக்கு தப்பாக போய்விட்டது. போலீசார் அவரை கண்டுபிடித்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version