தமிழ்நாடு

வேலூர் ஜோஸ் ஆலூக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் இருந்து மீட்கப்பட்ட 15 கிலோ நகைகள்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை அடித்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது என்பதும், நகை கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது சம்பந்தமாக ஒருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும், இந்த நகைகள் உருக்கப்பட்ட நிலையில் சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் சுடுகாட்டில் அந்த நகைகளை போலீசார் மீட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நகைகளை உருக்கி சுடுகாட்டில் புதைத்தது யார்? இந்த கொள்ளையில் இன்னும் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையில் ஈடுபட்ட அனைவரையும் ஒட்டுமொத்தமாக பிடித்து விடுவோம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் உருக்கப்பட்ட நிலையில் சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version