தமிழ்நாடு

வேளச்சேரி ‘வாக்குப்பதிவு இயந்திர திருட்டு’; இது ஒன்றுதான் வழி- போட்டியிட்ட காங். வேட்பாளர் சொல்லும் யோசனை!

Published

on

வேளச்சேரி தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கான தீர்வு குறித்துப் பேசியுள்ளார் அத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா.

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல்கள் மே 2 ஆம் தேதி நீக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.

இப்படியான சூழலில், சென்னை, வேளச்சேரி தொகுதியில் ஒரு நபர் பைக்கில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு இச்சம்பவம் நடந்துள்ள நிலையில், அதிமுக – பாஜகவினரே இதற்கு காரணம் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

குறிப்பாக வேளச்சேரி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா, இந்த சம்பவத்திற்கு அதிமுகவினரே காரணம் என்று பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, வேளச்சேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மவுலானா வலியுறுத்தியுள்ளார். தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, ‘பைக்கில் கொண்டு செல்லப்பட்டது இவிஎம் இயந்திரங்கள் கிடையாது’ என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

Trending

Exit mobile version