தமிழ்நாடு

இப்படி ஜல்லிக்கட்டு நடத்துறதுக்கு நடத்தாமலே இருக்கலாம்: நடிகர் வேல ராமமூர்த்தி பேட்டி!

Published

on

இவ்வளவு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஜல்லிக்கட்டை நடத்தாமலேயே இருந்து விடலாம் என நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியை 150 பேர்கள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு நடிகர், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி தந்தாலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் இவ்வாறு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நடத்தாமலேயே இருந்து விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு நல்ல அரசாக உள்ளது என்றும் முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும் ஆனால் ஜல்லிக்கட்டு இவ்வளவு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜல்லிக்கட்டு என்பது ஒரு திருவிழா என்றும் அந்த போட்டியை காண பொதுமக்கள் இல்லாமல் காளைகளை மட்டும் அவிழ்த்து விடுவது ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டியை கொரோனா வைரஸ் விதிமுறைகளின்படி பார்வையாளர்கள் அதிக அளவில் அனுமதிக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் பேசாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமலேயே இருந்து விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version