இந்தியா

வாகனங்களுக்காக காப்பீடு தொகை திடீர் அதிகரிப்பு: எவ்வளவு தெரியுமா?

Published

on

வாகனங்களுக்கான காப்பீடு தொகை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன காப்பீட்டு தொகையில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது வாகன காப்பீடு தொகை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் இது குறித்த அறிவிப்பில் மின்சக்தியில் இயங்கும் கார்கள் இருசக்கர வாகனங்களும் வர்த்தக வாகனங்களுக்கும் 15 சதவீத காப்பீடு தொகை குறைப்பு செய்யப்படும் என்றும் மற்ற வாகனங்களுக்கு வாகன காப்பீடு தொகை உயர்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் விபத்து ஏற்பட்டால் வாகன சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படாது என்றும் ஆனால் பாதிப்புள்ள நபருக்கு மூன்றாம் நபர் காப்பீட்டில் இழப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்ட வாகன காப்பீடு தொகை முழு விவரங்கள்:

இருசக்கர வாகனங்கள்:

150-350 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.1366
350 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.2804

கார்கள்

1000 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 2094
1000-1500 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 3416
1500 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 7879

 

seithichurul

Trending

Exit mobile version