தமிழ்நாடு

தக்காளி ரூ.120, பீன்ஸ் ரூ.110: அசைவத்தை நோக்கி செல்லும் பொதுமக்கள்!

Published

on

தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்பட முக்கிய காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அசைவத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் ஒரு கிலோ 20 ரூபாய் இருந்த தக்காளி தற்போது 120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

அதுமட்டுமின்றி பீன்ஸ் ஒரு கிலோ 110 ரூபாய் என்றும், வெண்டைக்காய் 45 ரூபாய் என்றும் பீட்ரூட் 45 ரூபாய் என்றும் முருங்கைக்காய் 80 ரூபாய் என்றும் விற்பனையாகி வருகிறது .

இந்த நிலையில் காய்கறியின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதை அடுத்து சிக்கன் மட்டன் சிக்கன் மீன் என அசைவ உணவை சாப்பிட்டு விடலாம் என்று மக்கள் அந்தப் பக்கம் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிமாநிலத்தில் இருந்து வரவேண்டிய தக்காளி உள்பட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலைகள் அதிக அளவு உள்ளதாக கோயம்பேட்டில் உள்ள காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version