தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் படுவீழ்ச்சி அடைந்த காய்கறி விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி, விவசாயிகள் அதிர்ச்சி!

Published

on

கடந்த சில வாரங்களுக்கு முன் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து இருந்த நிலையில் தற்போது காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .
உருளைக்கிழங்கு ஒரு கிலோ இருபது ரூபாயில் இருந்து 14 ரூபாயாக குறைந்துள்ளது என்றும் சின்ன வெங்காயம் 30 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கத்தரிக்காய் 20 ரூபாய்க்கும் 150க்கு விற்கப்பட்ட எலுமிச்சை 110 ரூபய்க்கும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் அவரைக்காய் 50 ரூபாய்க்கும் பீட்ரூட் 25 ரூபாய்க்கும் முட்டைகோஸ் 8 ரூபாய்க்கும் பச்சைமிளகாய் 35 ரூபாய்க்கும் கோவக்காய் 30 ரூபாய்க்கும்,சுரைக்காய் இருபது ரூபாய்க்கும் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காய்கறிகளை தாராளமாக வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version