தமிழ்நாடு

வெண்டைக்காய், கத்தரிக்காய் ரூ.110, அவரைக்காய் ரூ.90: விண்ணை முட்டும் காய்கறிகள் விலை!

Published

on

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது தக்காளியின் விலை ஓரளவு குறைந்து உள்ளது என்பதும் சென்னையில் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தக்காளி ஒரு கிலோ விற்பனையாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

ஆனால் தக்காளி விலை ஏறியது குறித்து பரபரப்பான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மற்ற காய்கறிகளின் விலையை குறித்து கண்டு கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. தக்காளி விலைக்கு இணையாக மற்ற காய்கறிகளின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
குறிப்பாக சாம்பார் உள்பட அனைத்து குழம்புகளிலும் உபயோகிக்கப்படும் கத்தரிக்காய் வெண்டைக்காய் ஆகியவை விலை ரூபாய் 100ஐ தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை விபரம் பின்வருமாறு:

வெண்டை 110
அவரை 90
கத்திரி 110
புடலை 60
பாவக்காய் 60
கோவைக்காய் 60
பீர்க்கன் 70
முட்டை கோஸ் 35
வெங்காயம் 34/30/26
நவீன் தக்காளி 70/60
நாட்டு தக்காளி 60/55
உருளை 32/26/22
சின்ன வெங்காயம் 65/50/45
ஊட்டி கேரட் 60/55/50
பெங்களூர் கேரட் 40
பீன்ஸ் 55/45
பீட்ரூட். ஊட்டி 55/50
கர்நாடக பீட்ரூட் 35/25
சவ் சவ் 25/22
முள்ளங்கி 55/50
முட்டை கோஸ் 35/32
வெண்டைக்காய் 110/100
உஜாலா கத்திரிக்காய் 110/100
வரி கத்திரி 80/70
காராமணி 70
பாவக்காய் 60/50
புடலங்காய் 60/50
சுரக்காய் 30/25
சேனைக்கிழங்கி 20/16
முருங்ககாய் .90/80
சேம கிழங்கு 20/15
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 15/12
பச்சை மிளகாய் 30/25
பட்டாணி 60/50
இஞ்சி 60/30
பூண்டு 60/90/130
அவரைக்காய் 90/80
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி.10
பீர்க்கங்காய் 70/60
எலுமிச்சை 50
நூக்கள் 70
கோவைக்காய் 50/40
கொத்தவரங்காய் 60
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய் 75/70
வண்ண குடமிளகாய் 200/180
கொத்தமல்லி 5
புதினா 6
கருவேப்பிலை 30
அனைத்து கீரை.30/25
தேங்காய் . 34/36

Trending

Exit mobile version