தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் இரண்டு மடங்கு உயர்ந்த காய்கறி விலை: தக்காளி 80 ரூபாயா?

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை காய்கறி விலைகள் மிகவும் சலுகையாக விற்பனையாகி வந்த நிலையில் திடீரென தற்போது காய்கறி விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ஒரு ரூபாய் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகி கொண்டு இருந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 75 லிருந்து 85 ரூபாய் விற்பனை ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் மற்ற காய்கறிகளும் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளதால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கத்தரிக்காய் 25 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 50 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாகவும், கேரட் பீன்ஸ் ஆகியவை ரூ.40ல் இருந்து 50 ரூபாய் என உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அவரைக்காய் விலை கிலோ ஒரு ரூபாய் 25 மட்டுமே கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் விற்பனையாகி வந்த நிலையில் இன்று இரு மடங்கு உயர்ந்து 50 ரூபாயாக விற்பனையாகி வருகிறது என்பதும் வெண்டைக்காய் 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்ந்துள்ளது என்பது முள்ளங்கி 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காய்கறி விலையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குறைவாகவே வாங்கி செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் ஒரு சில நாட்களுக்கு இதேபோன்றுதான் காய்கறி விலை உயர்ந்து கொண்டே இருக்கும் என்று வியாபாரிகள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version