சினிமா செய்திகள்

’வீட்ல விசேஷங்க’ டைட்டிலை மாற்றிய ஆர்ஜே பாலாஜி: புதிய போஸ்டர் ரிலீஸ்

Published

on

ஆர் ஜே பாலாஜி நடித்த இயக்கி வந்த திரைப்படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் அந்த டைட்டிலில் சிறிய மாற்றம் செய்துள்ளார்.

கே பாக்யராஜ் இயக்கத்தில் ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் அதே டைட்டிலில் ஆர்ஜே பாலாஜியும் ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்தப் படம் இந்தியில் சூப்பர்ஹிட்டான பதாய் ஹோ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் ஊர்வசி உள்பட பல நடித்த இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இதில் இந்த படத்தின் டைட்டில் ’வீட்டில் விசேஷம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடமும் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version