விமர்சனம்

வீரமே வாகை சூடும் – விமர்சனம்

Published

on

திரைப்பட ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருந்த படம் வீரமே வாகை சூடும். பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருந்தது. பின்னர் ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் படம் படம் பிப்ரவரி 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது.

கதை:

காவலர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி சென்றுகொண்டு இருப்பவர் விஷால். இவர் கண் எதிரில் தவறு நடந்தால் அதை தட்டி கேட்பார். இதுவே இவரது காவலர் பணிக்கு இடையூறாக இருக்கும் என அவரது அப்பா கண்டிக்கிறார். ஆனால் ஹிரோ அப்பாவின் இதுபோன்ற அட்வைஸ் எல்லாம் கேட்க மாட்டார். அப்போது ஒரு சமூகப் போராளி அரசியல்வாதி ஒருவரின் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடி வருகிறார். அது அந்த அரசியல்வாதியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதால் அவரை கொன்றுவிடுகிறார்.

அந்த கொலையை விஷாலின் தங்கை பார்த்துவிடுகிறார். எனவே அவரும் கொல்லப்படுகிறார். தனது தங்கையின் கொலைக்கு யார் காரணம். எதற்காகக் கொன்றார். அவரை விஷால் எப்படிப் பலி வாங்கினார் என்பதுதான் வீரமே வாகை சூடும் படம்.

இது தமிழ் சினிமாவின் பலிவாங்கல் கதையாக இருந்தாலும், இயக்குநர் து.பா.சரவணன் ஓர் அளவுக்கு திரில்லராக கூற முயன்று அதை ஓர் அளவிற்கு வெற்றிபெற்றுள்ளார்.

veerame vaagai soodum

முதல் பாதியில் யோகி பாபு காமெடி ரசிக்கும் படியாக இருந்தன. விஷால் வழக்கம் போல கோவம், ஆக்‌ஷன், அதிரடி, நடனம் என எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்துள்ளார். பிற நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் பின்னணி இசை சிறப்பு. எடிட்டிங், ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

குறைகள் என கேட்டால் வழக்கமான கதை. முதல் பாதி ஸ்லோவ். படத்தின் நீலம். திரைக்கதையில் ஆங்காங்கே சறுக்கல்.

மொத்தமாகச் சொன்னால் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version