சினிமா செய்திகள்
வேதாளம் ரீமேக்: சிரஞ்சீவிக்கு தங்கை ஆக கீர்த்தி சுரேஷ் அல்லது சாய் பல்லவி?
![vedhalam remake - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/vedhalam-remake.jpg)
தல அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ள செய்தி தெரிந்ததுதான்.
வேதாளம் படத்தில் அஜித்-க்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்து இருப்பர். அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்க இன்னமும் நடிகையை முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.
இந்தப் படத்தில் தங்கை கதாபாத்திரம் தான் கணமானது என்பதால் அதற்கான நாயகி வேட்டையே தற்போது நடந்து வருகிறதாம். முதலில் சிரஞ்சீவிக்கு தங்கை ஆக நடிக்க நடிகை சாய் பல்லவியைத் தான் படக்குழு கேட்டுள்ளார்கள். ஆனால், தற்போது அந்தத் தங்கை கதாபாத்திரத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.
தெலுங்குவில் இந்தப் படத்தை மெஹிர் ரமேஷ் இயக்க உள்ளார். செப்டம்பர் முதல் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். கீர்த்தி சுரேஷ் தமிழில் அண்ணாத்த, சாணிக்காயிதம், தெலுங்குவில் மகேஷ் பாபு உடன் ஒரு படம், மலையாளத்தில் 2 படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார்.