தமிழ்நாடு

தமிழர்களுக்காக புதிய அறநிலைத்துறை அமைச்சகம்: விசிக கோரிக்கை

Published

on

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சகம் இருக்கும் நிலையில் தமிழர்களின் மெய்யறிவு மரபை பாதுகாக்கும் வகையில் புதிய அறநிலை துறை அமைச்சகம் வேண்டும் என்றும் அந்த அமைச்சகத்தில் சமணம், புத்தம் மற்றும் சனாதன சாதி சடங்குகளை பின்பற்றாத ஆதிதிராவிட மக்கள் இடம்பெற வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இது குறித்து அவர் பேசியபோது, ‘சனாதன ஆன்மீகம் அல்லது இந்து மதத்திலிருந்து விலகி நின்று முழுக்க முழுக்க சாதியை பின்பற்றாத பெளத்தம், சமணம் மற்றும் ஆதிதிராவிடர் வழிபடக்கூடிய கோயில்களை இணைத்து புதிய அறநிலைத்துறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு தமிழர்களின் மெய்யறிவு அறநிலைத்துறை என்ற பெயர் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

ஏற்கனவே இந்து மக்களுக்கு எதிராக பேசிவரும் விடுதலை சிறுத்தைகள் சமண மதத்தையும் புத்த மதத்தையும் ஆதரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பௌத்தம், சமணம் ஆகிய மதங்களை இணைத்து புதிய அறநிலைத்துறை வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version