தமிழ்நாடு

தேர்தலுக்கு பின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிரிவார்கள்: இன்னும் என்னென்ன நடக்கும்? விசிக எம்பி டுவீட்

Published

on

தேர்தலுக்கு பின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிரிந்து விடுவார்கள் என்றும் பாமக, பாஜகவில் இணைந்து விடும் என்றும் கமல் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கி விடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது:

தேர்தலுக்குப் பிறகான காட்சிகள்:

தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைந்தபிறகு பின்வரும் காட்சிகள் அரங்கேறக்கூடும்

1. கமல் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தக் கிளம்பிவிடுவார். மநீமவில் தற்காலிக தஞ்சம் புகுந்த சிலர் பாஜகவுக்கு செல்வார்கள்

2. பாமகவை பாஜகவில் இணைக்கும்படி டெல்லியிலிருந்து அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகும்

3. இபிஎஸ் – ஒபிஎஸ் பிரிவார்கள். எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபட்டு மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும்

4. தமிழகக் கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா?எனத் தெளிவாக அணிபிரியும்

தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது.

தோழர்களே!
சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும்.

இவ்வாறு விடுதலைச்சிறுத்தைகள் எம்பி ரவிகுமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version