தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை? அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் பெற்ற திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு வேண்டிய தகுதிகள் குறித்த பட்டியலை ஏற்கனவே திமுக தலைமையிடம் அளித்திருந்தது.

இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 6 தொகுதிகள் குறித்த விவரம் சற்று முன் வெளியாகி உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் வானூர், காட்டுமன்னார்கோயில், செய்யூர், அரக்கோணம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் இதில் நாகப்பட்டினம. திருப்போரூர் தவிர மீதி உள்ள 4 தொகுதிகளும் தனித்தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நாளை விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி முடிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டியதை அடுத்த கட்ட பணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version