தமிழ்நாடு

பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்த மதிமுக, விசிக: திமுக கூட்டணியில் சிக்கலா?

Published

on

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தரப்பில் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தைக்கு செல்ல இருந்த நிலையில் திடீரென இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் கேட்பதாகவும் தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்ததாகவும், ஆனால் திமுக அதனை ஏற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending

Exit mobile version