தமிழ்நாடு

தேமுதிக, விசிக நிலைமை என்ன? அதிர்ச்சி தகவல்!

Published

on

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே இதுவரை 23 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் மற்றும் மனிதநேய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் அதிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் அதிமுக கொடுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தேமுதிக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்த இரு கட்சிகளுமே அந்த கூட்டணியில் தங்கள் நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே கூட்டணி, இல்லை என்றால் வெளியேறலாம் என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.

இதனால் தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version