இந்தியா

வாட் வரி குறைப்பு: பெட்ரோல் விலை ரூ.8 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 8 குறைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி அனைத்து மாநிலங்களும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது என்பதும் இதனால் பெட்ரோல் விலை ரூபாய் 10 குறைந்தது என்பதும் டீசல் விலை ரூபாய் 5 குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஒரு சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைத்து வந்தன என்பதும் தமிழக அரசு உள்பட ஒருசில மாநிலங்கள் இன்னும் வாட் வரியை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லி அரசு பெட்ரோல் மீதான வாட் வரி ரூபாய் 8 குறைத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் இன்று முதல் பெட்ரோல் விலை ரூபாய் 8 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லியில் உள்ள பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டெல்லி அரசு போன்றே பெட்ரோல் மீதான வரியை தமிழக அரசும் குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

seithichurul

Trending

Exit mobile version