தமிழ்நாடு

ஆளுனர் தமிழிசை எடுத்த அதிரடி நடவடிக்கை: புதுவையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையும் உயர்ந்துள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தொட்டுவிட்ட பெட்ரோல் டீசல் விலை விரைவில் தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் புதுவையிலும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வாட் வரி குறைப்பால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.40 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று தமிழகத்திலும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version