சினிமா செய்திகள்

வருண் – அக்சரா படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்: ‘வேல்ஸ்’ நிறுவனம் இல்லை

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் நடிக்கும் படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் ஆனால் அந்நிறுவனம் வேல்ஸ் நிறுவனம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் வருண் மற்றும் அக்சரா தனித்துவமாக விளையாடினார்கள் என்பதும் இருவரும் பிக்பாஸ் வீட்டினுள்ளே நட்புடன் பழகி வந்தார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் வருண் மற்றும் வருண் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிபிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் இணைந்து கலந்து கொண்டார்கள் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒரே படத்தில் வருண் ஜோடியாக அக்சரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருணின் மாமா மேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தாலும் இந்த படத்தை தயாரிப்பு வேல்ஸ் நிறுவனம் அல்ல என்றும் தமிழ் திரையுலகின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வருண் நடித்த \ஜோஸ்வா இமைபோல் காக்க\ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அக்சராவுடன் வருண் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது அவரது ஆர்மியினர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version