சினிமா செய்திகள்

’வாரிசு’ படத்தின் மூன்று லுக்ஸ்: ரசிகர்களின் கருத்து என்ன?

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இன்று செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே.

முதல் லுக்கில் தளபதி விஜய் மிகவும் ஸ்டைலிஷாக உட்கார்ந்து இருப்பது போன்று இருந்தது என்பதும் இரண்டாவது நோக்கில் அவர் குழந்தைகளுடன் ஜாலியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மூன்றாவது லுக்கில் தளபதி விஜய் மாஸ் ஆக்ஷன் காட்சியில் இருந்ததுபோல் பைக்கிலிருந்தது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ’வாரிசு’ திரைப்படம் ஒரு குடும்ப கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்காது என்றும் கூறப்பட்டது.

ஆனால் முதல் இரண்டு போஸ்டர்கள் குடும்ப கதையை உறுதி செய்தாலும் மூன்றாவது போஸ்டர் கண்டிப்பாக இந்த படத்தில் ஆக்ஷன் காட்சி இருப்பதை உறுதி செய்து உள்ளது. எனவே குடும்ப கதையம்சம் கொண்ட ஆக்ஷன் படமாக ’வாரிசு’ படம் இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் படத்தில் ஸ்டண்ட் இல்லாமல் எப்படி இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் குடும்ப ஆடியன்ஸ் மற்றும் ஆக்சன் ஆடியன்ஸ் ஆகிய இரு தரப்பினரையும் திருப்தி செய்யும் படமாக ’வாரிசு’ படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளர. தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version