சினிமா செய்திகள்

Varisu Collection: 300 கோடி வசூல் அள்ளிய வாரிசு…அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. விஜயின் 66வது படமான இத்திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதியன்று பொங்கலன்று விஜய் ரசிகர்களுக்குப் பரிசாக வெளியானது. மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா,ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

தமன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.முதன்முறையாக தமன் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படம் பிடித்திருந்தது.

வாரிசு படம் வெளியான ஏழு நாட்களில் உலக அளவில் 210 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து, 12 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலித்ததாகவும்  படக்குழு  அறிவித்தது. இந்நிலையில், வெளியாகி 26 நாட்கள் ஆகியுள்ள நிலையில் , தற்போது வாரிசு படம் 300 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த பிகிம் திரைப்படம் 300 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாரிசு படமும் 300 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version