சினிமா செய்திகள்

’துணிவு’ ‘வாரிசு’ படங்களின் அதிகாலை சிறப்பு காட்சி ரத்து: தமிழக அரசின் கண்துடைப்பு உத்தரவா?

Published

on

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுடன் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் அதிகாலை ஒரு மணிக்கும், விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் அதிகாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ள நிலையில் அதில் ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் இதுகுறித்து அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திரையரங்க வளாகத்தில் உயரமான பேனர்களை வைப்பதற்கும் அந்த பேனர்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ படங்களை அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டாலும் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு காட்சிகளுக்கு தடை இல்லை என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் திட்டமிட்டபடி அதிகாலை காட்சி திரையிடப்படும் என தெரிகிறது.

கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும்தான் அதிகாலை காட்சி திரையிடப்படும் நிலையில் ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை காட்சிகள் ரத்து என்ற அறிவிப்பு கண்துடைப்பு என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version