சினிமா

சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன்: வரலட்சுமி அதிரடி!

Published

on

பிரபல யூடியூப் சேனல் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லிக்கான விருதை பெற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் சிம்புக்கு முத்தம் கொடுக்க ஆசைப்படுவதாகவும், விஷாலை கொலை செய்வேன் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் சென்னை டிரேட் செண்டரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறந்த வில்லிக்கான விருதை நடிகை வரலட்சுமி சர்கார் படத்தில் வில்லியாக நடித்ததற்காக பெற்றார். இதனையடுத்து வாரலட்சுமியிடம் ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும், ஒருவரை கொலை செய்ய வேண்டும், ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்றால் உங்கள் தேர்வு யார் என கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த வாரலட்சுமி, சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன் மற்றும் யாராவது ஒருவரை திருமணம் செய்வேன் என அதிரடியாக தெரிவித்தார். மேலும் இந்த விருதை தனது தாய்க்கு சமர்பித்தார் வரலட்சுமி.

seithichurul

Trending

Exit mobile version