Connect with us

ஆன்மீகம்

வரலட்சுமி விரதம்: திருமணமாகாத பெண்களும் விரதம் இருக்கலாமா?

Published

on

வரலட்சுமி விரதம் 2024:இன்று வரலட்சுமி விரதம். இந்நாளில் திருமணமாகாத பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்யலாமா.. கூடாதா? என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

வரலட்சுமி பூஜை என்பது செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளான வரலட்சுமி தேவியை வழிபடும் ஒரு முக்கியமான நாள் ஆகும். வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்கள் கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காக விரதம் இருந்து வரலட்சுமி பூஜை செய்கிறார்கள். வரலட்சுமி விரதம் லட்சுமி தேவியின் அருமை முழுமையாக பெறுவதற்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்தவகையில், இந்த 2024 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் நாளை (ஆகஸ்ட்.16) கொண்டாடப்படுகிறது.

வரலட்சுமி விரதம் எப்படி கொண்டாடப்படுகிறது?

திருமணமான பெண்கள் வரலட்சுமி விரதத்தின் முந்தைய நாள் அதாவது, இன்று (ஆகஸ்ட்.16) சூரிய உதயம் முதல் மறையும் வரை விரதம் இருந்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பிறகு வெள்ளிக்கிழமை அன்று அதாவது நாளை அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பாக தலைக்கு குளித்துவிட்டு, வீட்டை நன்கு சுத்தம் செய்து, கோலங்கள் போட்டு கலசத்தை அலங்கரிக்க வேண்டும். கலசத்தை சுற்றி சந்தனத்தால் பூசி, பச்சரிசி, நாணயங்கள், மஞ்சள் மற்றும் மலர்கள் போன்றவை பானயை நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு ஸ்வஸ்திகா சின்னத்தை அதில் வரைய வேண்டும். கடைசியாக கலசத்தை மா இலைகளால் அலங்கரித்து மஞ்சள் தடவி தேங்காயால் மூடி வைக்க வேண்டும்.

பின்னர் விநாயகப் பெருமானை வணங்கி, ஸ்லோகங்களை சொல்லி ஆரத்தி செய்து பிறகு லட்சுமி தேவியை வழிபடுவதன், மூலம் பூஜை ஆரம்பமாய் இருக்கிறது. பூஜை முடிந்ததும் வீட்டிற்கு  வந்தவர்களுக்கு நைவேத்யமாக பாயாசம் வழங்க வேண்டும். பிறகு சனிக்கிழமை அன்று, அதாவது நாளை மறுநாள்  (ஆகஸ்ட்.17) சடங்குகளை முடித்து, குளித்த பிறகு கலசத்தை அகற்ற வேண்டும். வரலட்சுமி விரதத்தை கடைபிடிப்பது அமைதி, செழிப்பு மற்றும் நிதி ஆசிர்வாதங்களை கொண்டு வருவதாக நம்மப்படுகிறது.

திருமணம் ஆகாத பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாமா?

ஆம், திருமணம் ஆகாத பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து பூஜையை எந்தவித பிரச்சனையுமின்றி செய்யலாம். திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையில் பங்கேற்க கூடாது என எந்தவித குறிப்பிட்ட விதியும் இல்லை. உண்மையில், இந்நாளில் திருமணமாகாத பெண்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சி, செல்வம் மற்றும்  திருமணத்திற்கும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக பல வீடுகளிலும் வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கிறார்கள். முக்கியமாக திருமணம் ஆகாத பெண்கள் வரலட்சுமி விரத நாளில் விரதம் இருந்து பூஜை செய்து லட்சுமி தேவி வழிபட்டால் உடனே திருமணயோகம் கைகூடும் என்று சொல்லப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

  • வரலட்சுமி விரதம் என்பது ஒரு ஆன்மிக நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கம். ஒவ்வொருவரும் தங்களின் விருப்பப்படி இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.
  • திருமணமாகாத பெண்கள் விரதம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. தங்கள் விருப்பத்தின் பேரில் விரதம் இருந்து பூஜை செய்யலாம்.
  • விரதம் என்பது உடல் மற்றும் மனதை சுத்திகரித்து, தெய்வத்தை நினைத்து தியானிப்பதற்கான ஒரு வழி.
  • வரலட்சுமி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள், அமைதி மற்றும் செழிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வரலட்சுமி விரதம் கொண்டாடும் முறை:

  • வீட்டை சுத்தமாக வைத்து, கோலங்கள் போட்டு அலங்கரிக்கவும்.
  • கலசத்தை அலங்கரித்து, ஸ்வஸ்திகா சின்னம் வரையவும்.
  • விநாயகரை வணங்கி, லட்சுமி தேவியை வழிபடவும்.
  • பூஜை முடித்த பின்பு நைவேத்தியம் வழங்கவும்.

வரலட்சுமி விரதத்தின் பலன்கள்:

  • செல்வம் மற்றும் செழிப்பு
  • நேர்மறை எண்ணங்கள்
  • அமைதி
  • திருமண யோகம்
  • குடும்ப ஒற்றுமை

வரலட்சுமி விரதம் என்பது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் ஒரு பூஜை. திருமணமாகாத பெண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து லட்சுமி தேவியின் அருளை பெறலாம்.

 

author avatar
Poovizhi
ஆரோக்கியம்3 நிமிடங்கள் ago

இரவில் சரியான தூக்கம் வரவில்லையா? இதை படியுங்கள்!

பல்சுவை13 நிமிடங்கள் ago

தாமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற சிறந்த 6 இடங்கள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்55 நிமிடங்கள் ago

ஆகஸ்ட் 16 முதல் 31 வரை 12 ராசிகளுக்கும் இருவார ராசிபலன்!

சினிமா1 மணி நேரம் ago

டிமான்ட்டி காலனி 2: ரசிகர்கள் கொண்டாட்டத்தில்! 3-ம் பாகத்திற்கான ஆவலும் அதிகரிப்பு!

ஜோதிடம்1 மணி நேரம் ago

ஷ்ராவண மாதத்தில் இந்த ராசிகள் எச்சரிக்கை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

வரலட்சுமி விரதம்: திருமணமாகாத பெண்களும் விரதம் இருக்கலாமா?

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 16, 2024)!

ஜோதிடம்10 மணி நேரங்கள் ago

சூரியன் தன் சொந்த வீட்டிற்கு வருகிறார்! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மரகத பூஞ்சோலை” திட்டத்தை துவக்கி வைத்தார்: முழு விவரம்

செய்திகள்10 மணி நேரங்கள் ago

பான் கார்டு இல்லாமல் சிபில் ஸ்கோர் எப்படி சரிபார்க்கலாம்?

வணிகம்7 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(09-08-2024)

சினிமா2 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்4 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

சினிமா19 மணி நேரங்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உடன் கை கோர்க்க கோரிக்கை வைக்கும் கேரளா!

வணிகம்2 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)