சினிமா செய்திகள்

பிறந்த நாளன்று உடல் உறுப்பு தானம் செய்த வரலட்சுமி!

Published

on

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், நேற்று (மார்ச் 5)தனது 34வது பிறந்த நாளை கொண்டாடினார்.

நடிகையாக மட்டும் அல்லாமல் சேவ் சக்தி என்ற பெண்களுக்கான அமைப்பையும் உருவாக்கி சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

வரலட்சுமி, நேற்று தனது பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகளின் தொண்டு நிறுவனத்திற்கு சென்று குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், அங்குள்ள 10 குழந்தைகளின் படிப்பு செலவையும் தான் ஏற்பதாகவும் உறுதியளித்தார்.

தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை மேலும், சிறப்பாக்க எண்ணிய வரலட்சுமி, தனது உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ளார். இவருடன் மேலும், 25 சேவ் சக்தி பெண்களும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு 8க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த வரலட்சுமிக்கு, இந்த ஆண்டும் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளன.

Trending

Exit mobile version