சினிமா

வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸர் ரிலீஸ்!

Published

on

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் இன்று யூடியூபில் வெளியானது.

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு, அந்த படத்தில் தான் பேசிய வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற வசனத்தையே டைட்டிலாக வைத்து சுந்தர்.சி உருவாக்கியுள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அத்தைப் பெண் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா நடித்துள்ளனர். காமெடியில் ரோபோ ஷங்கர் மற்றும் யோகிபாபு கலக்க உள்ளனர். பிரபு, நாசர், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் பொங்கலுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கு போட்டியாக வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version