தமிழ்நாடு

ஐகோர்ட்டின் அறிவுரை விஜய்க்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் பொருந்தும்: வன்னி அரசு

Published

on

சென்னை ஐகோர்ட்டின் அறிவுரை விஜய்க்கு மட்டுமல்ல ரஜினிகாந்த் உள்பட அனைத்து திரை உலகினருக்கும் தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னியரசு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி ஏற்கனவே கட்டிவிட்டார். அவர் வாங்கிய காருக்கு நுழைவு வரி அதிகமாக விதிக்கப்பட்டு இருந்ததால் அந்த வரியை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி விஜய்க்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து விஜய்க்கு அட்வைஸ் செய்ததால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்க்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை காயத்ரி ரகுராம், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் உள்பட பலர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதேபோல் ஒரு சிலர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுரை நடிகர் விஜய் அவர்களுக்கு மட்டுமல்ல; நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அத்தனை திரை உலகத்தை சேர்ந்தவர்களுக்கும் தான்.#ரீல்ஹீரோ என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/VanniArasu_VCK/status/1415166026673623045

Trending

Exit mobile version