சினிமா செய்திகள்

’ஜெய்பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும்: வன்னியர் சங்கம் கண்டனம்!

Published

on

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரண்டு பக்க பாசிட்டிவ் விமர்சனங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி திரைவிமர்சகர்கள், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், உள்பட பலரும் இந்த படத்தை போற்றி பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்ப தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் தோன்றும் இன்ஸ்பெக்டர் கேரக்டர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் போன்றும் வன்னியர் சமுதாயம் என்றாலே வன்முறையாளர்கள் என்பது போன்றும் ’ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த படத்திற்கு வசனம் எழுதிய எழுத்தாளர் கண்மணி உள்பட பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வன்னியர் சங்கம் ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. ’ஜெய்பீம்’ திரைப்படம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை விதைத்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் உண்மையை காட்டுவதை விட அந்த படுகொலையை அரங்கேற்றிய காவலர் ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலைநிறுத்துவதில் படக்குழு பாடுபட்டு இருக்கிறது என்றும் இது வன்னியர்களுக்கு எதிரான அப்பட்டமான சாதி வன்மம் என்றும் வன்னியர் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்கி வன்னியர் மக்களிடம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version