தமிழ்நாடு

பொறியியல் படிப்பில் 10.5% இட ஒதுக்கீடு அமல்! விண்ணப்பத்தில் புதிய பிரிவு சேர்ப்பு!

Published

on

வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணை நேற்று வெளியான நிலையில் இன்று பொறியியல் படிப்புகளுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் ஓபிசி V என்ற பிரிவு தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து இந்த பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த விண்ணப்பத்தில் நேற்றுவரை 10.5% இட ஒதுக்கீடு என்ற பிரிவு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இந்த பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தமிழக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை வெளியிட்ட நிலையில் இந்த அரசாணைக்கு நன்றி தெரிவித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version