சினிமா செய்திகள்

அந்தம்மா பெரிய பணக்காரி: லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்து வனிதா விஜயகுமார்

Published

on

அந்த அம்மா ரொம்ப பணக்காரி என்றும் அவங்க பிக்பாஸ் வீட்டுக்கு எல்லாம் போக மாட்டாங்க என்றும் வனிதா விஜயகுமார், நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பதும் குறிப்பாக திருமண விஷயத்தில் அவரது முடிவு பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வனிதா விஜயகுமார் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் கூறிய வனிதா, ‘ஐயோ அந்த அம்மா பெரிய பணக்காரி, இதெல்லாம் அவங்களுக்கு தேவையில்லை என்று பதில் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்றும், எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்தாலும் குடும்பத்தை விட்டு என்னால் பிரிந்திருக்க முடியாது என்றும், அதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இருந்து என்னுடைய பெயரை எடுத்துவிடவும் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனக்கு இன்னொரு கணவர் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றும், இந்த நிமிஷம் என்னுடைய வாழ்க்கையை நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்றும், எதிர்காலத்தை பற்றி நான் கவலைப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் தனக்கு இன்னொரு கணவர் வருவாரா? என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும் அது சஸ்பென்ஸ் கதை மாதிரி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு த்ரில் கதை என்றால் ரொம்ப பிடிக்கும் என்றும் அதனால்தான் திரில்லர் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றும் வனிதா விஜயகுமார் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.

மேலும் ரியாலிட்டி ஷோ என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் தற்போது ஓடிடி போன்ற தளங்கள் வளர்ச்சியடைந்து உள்ளதால் ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு பொழுதுபோக்கு கிடைக்கின்றது என்றும், அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றும் அவர் கூறினார். வனிதாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version