டிவி

‘மீண்டும் காதலில்..’- வைரலாகும் வனிதா விஜயகுமாரின் போஸ்ட்..!

Published

on

நடிகை வனிதா விஜயகுமார் தான் மீண்டும் காதலில் இருப்பதாக ஒரு போஸ்ட் பதிவு செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் பிரபலமடைந்தார். வனிதா அடுத்து மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுமே வைரலானது. பீட்டர் பால் உடனான திருமணம், பிரிவு, குக்கு வித் கோமாளி என வனிதா எங்கு சென்றாலும் வைரலாகி வருகிறார்.

தற்போது வனிதா விஜய் தொலைகாட்சியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக உள்ளார். இந்நிலையில் தற்போது, “மீண்டும் காதலில்… இப்போது உங்களுக்கு சந்தோஷமா?” என உமா ரியாஸ் பெயரை டேக் செய்துள்ளார். இப்பதிவை வனிதா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version