டிவி

வெள்ளித்திரை, சின்னத்திரை எனப் புகுந்து விளையாடும் வனிதா விஜயகுமார்..!

Published

on

நடிகை வனிதா விஜயகுமார் சினிமா, சீரியல், டிவி நிகழ்ச்சிகள், யூ-ட்யூப் சேனல் என மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதன் பின்னர் குக்கு வித் கோமாளி, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர் எனத் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இடையில் சன் டிவி சீரியல் ஒன்றில் ஒரு வார கெளரவ தோற்றத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இயக்குநர் ஆடம் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்படும் படத்தில் வனிதா விஜயகுமார் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதுபோக தற்போது விஜய் டிவி-யை விட்டு ஜீ தமிழ் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார் வனிதா. நடிகர் அமித் பார்கவ் கதாநாயகனாக நடிக்கும் ‘திருமதி ஹிட்லர்’ சீரியலில் தான் தற்போது வனிதா நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் மூத்த நடிகை அம்பிகா கதாநாயகன் அமித்-ன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திருமதி ஹிட்லர் சீரியலில் வனிதா தொடர்ந்து நடிக்கப் போகிறாரா அல்லது இந்த சீரியலிலும் கெளரவத் தோற்றம் ஆக மட்டும் வருகிறாரா என்பது குறித்து சீரியலின் போக்குதான் முடிவு செய்யுமாம்.

Trending

Exit mobile version