சினிமா செய்திகள்

நான்கு அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன்: வனிதா விஜயகுமார் பேட்டி!

Published

on

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் வனிதா விஜயகுமார் மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்பதும் அந்த திரைப்படத்தின் டைட்டில் ’பிக்கப் டிராப்’ என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனியில் நடந்தது.

இந்த விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், ‘நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்றும் அது தன்னுடைய விருப்பம் என்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க தனது தைரியம் இருப்பதாகவும் தெரிவித்தார்

மேலும் தான் அரசியலுக்கு வருவதாக தன்னுடைய ஜோதிடர் கூறினார் என்றும் ஆனால் அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்தார். வனிதாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், ’ஒரு பெண் இந்த உலகில் தனியாக வாழ்வது மிகவும் கடினம் என்றும் அதனால் வனிதா திருமணம் செய்து கொள்வது குறித்து யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் அது அவருடைய தனிப்பட்ட உரிமை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வனிதா அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பல அவமானங்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version