தமிழ்நாடு

620 கிமீக்கு மனித சங்கிலி.. கேரளாவில் பெண்களை திரட்டி போராடும் பினராயி அரசு!

Published

on

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் அம்மாநிலத்தில் 620 கிமீக்கு பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். கேரள கம்யூனிச அரசின் முழு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது.

கேரளா அரசு தக்க பதிலடி கொடுக்கும் என்று ஏற்கனவே அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பெண்கள் அமைப்புகள் பலவற்றுடன் பினராயி விஜயன் சந்திப்பு நடத்தினார். சந்திப்பின் முடிவில் கேரளாவில் பெண்கள் சார்பில் பெரிய மனித சங்கிலி போன்ற மதில் அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த ”பெண்களின் மதில் சுவர்” போராட்டம் இன்று நடக்கிறது. இது மிகவும் அமைதியான முறையில் நடக்கும். மாலை மூன்று மணிக்கு இந்த போராட்டம் தொடங்கும். பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்திற்கு வனிதா மதில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 620 கிமீக்கு பெண்கள் கைகளை இணைத்து சங்கிலி போல சாலை ஓரம் நிற்க போகிறார்கள். கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை இந்த சங்கிலி நீள உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பெண்களை வழி நடத்துவார்கள்.

Trending

Exit mobile version